Ads (728x90)

ஈரானியக் கப்பலான 'IRIS Bushehr' கப்பலை இயந்திரப் பழுது காரணமாக திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அந்த கப்பலில் இருந்த 208 பணியாளர்களையும் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget