Ads (728x90)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குமாரும் எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கைது செய்யப்பட்ட பிக்குகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீர்கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதேவேளை, குறித்த பிக்குகள் குழுவிற்குத் தலைமை தாங்கி இந்த குற்றத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான மற்றுமொரு பிக்கு, கம்பஹா - மீகஹமுல்ல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களின் பயணப் பைகளில் பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்ட போலி மறைவிடங்களுக்குள் இருந்து 110 கிலோகிராமுக்கும் அதிகமான “குஷ்” மற்றும் “ஹேஷ்” போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஒவ்வொரு சந்தேக நபரும் தங்களது பயணப் பைகளில் 5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget