ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 4,000 வீடுகளில் இறுதி தொகுதியான 145 வீடுகள், இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நிகழ்நிலை (Online) ஊடாக மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர் சந்திப்பில் உரையாற்றிய இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிகப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, OCI (Overseas Citizen of India) அட்டை பெறுவதற்கான தகுதியை 5ஆம் மற்றும் 6ஆம் தலைமுறை வரை நீடிப்பதாக அவர் அறிவித்தார்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 4,000 வீடுகளின் இறுதித் தொகுதியை அவர் இன்று இணையவழியில் (Virtually) பயனாளிகளிடம் கையளித்தார்.தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
450 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நிதியுதவிப் பொதியின் கீழ், பாதிக்கப்பட்ட சமூகங்களை இணைக்கும் வகையில் மேலும் 3 புதிய பெய்லி (Bailey) பாலங்கள் அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
நேற்று கையளிக்கப்பட்ட 145 வீடுகளுடன் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஊடாக 4000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இலங்கை மக்களுக்கு 50,000 வீடுகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. மேலும் 10,000 வீடுகள் 4 ஆம் கட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.


Post a Comment