Ads (728x90)

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை சுமார் 15 மணித்தியாலங்கள் நீடித்தபோதிலும், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எவ்வித ஒப்பந்தமும் இன்றி அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல்கள் 06 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 07ஆம் திகதி 02 வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தமாக பாகிஸ்தான் முன்வந்து ஏற்பாடுகளை செய்தது. 

இந்த முக்கிய பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை 01 மணியளவில் ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.40 மணி வரை நீடித்தது. 

அமெரிக்காவுடன் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தோல்வியிலும், வாக்குறுதி மீறல்களிலும் முடிவடைகின்றன. நல்லெண்ணம் இருந்தாலும், நம்பிக்கை இல்லை என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஜே. டி. வான்ஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், இரு தரப்பும் விரிவான விவாதங்களில் ஈடுபட்டது நல்ல விஷயம். ஆனால் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. இது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, ஈரானுக்கும் பாதகமானது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ, அதற்கான திறனை வைத்திருக்கவோ கூடாது என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை எனவும், அதில் உறுதி கிடைக்காததே பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget