Ads (728x90)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைமை தாங்கிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம விகாரையை நோக்கி அவர்கள் ஆரம்பித்த சமாதான நடைப்பயணத்தின் மூன்றாம் நாள், உபய விகார மகா சங்கத்தினரதும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினதும் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமானது.

மூன்றாம் நாள் நடைப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உட்பட மகா சங்கத்தினரும், பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தலதா மாளிகையின் பத்திரிப்புவ முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் மகா சங்கத்தினர் பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

தலதா மாளிகையில் ஆரம்பமான மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம், மாவனெல்ல பெலிகம்மன வித்யாவர்த்தன பிரிவேனா பொத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளதுடன், ஏப்ரல் 28 ஆம் திகதி இச்சமாதான நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget