Ads (728x90)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள் என்றும், அதற்கமைய பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும், பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 

இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் ஒரு பக்கத்தில் செயற்படும் அதேவேளை, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் எனவும் தெரிவித்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget