இங்கு, புனித தந்த தாது மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்றை வண, பஞ்ஞாகர தேரரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்தது நான் பெற்ற பாக்கியமாகக் கருதுவதோடு, இது இலங்கை வாழ் பௌத்தர்களாகிய எமது பௌத்த மரபுரிமையை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு விசேட தருணமாகும் என அவர் தெரிவித்தார்.
பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட குழுவினர் இந்நாட்டில் மேற்கொண்ட நடைபயணம், நமது நாட்டில் ஒரு புதிய தர்ம எழுச்சியை உருவாக்கியுள்ளது என்றும், அத்துடன் ஒழுக்கம் மற்றும் தர்ம நெறிகளைக் கடைப்பிடிக்கும் தேரர்கள் மீது இந்நாட்டு பொதுமக்களுக்கு இருக்கும் மிகுந்த பக்தியையும், கௌரவத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்றும், அவரது போதனையான விழிப்புணர்வை பயிற்சி செய்து, இந்த அமைதியான தீவை மனிதநேயமிக்கத் தீவாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிக்கான நடைபயணத்தை இலங்கையில் முன்னெடுத்து, நாட்டு மக்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கியமைக்காக, வண, பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கு தனது கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


Post a Comment