Ads (728x90)

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள், பதிவு செய்யப்பட்ட பகற்பராமரிப்பு நிலையங்களில் (Daycare Centres) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டில் பணியாற்றும் பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலர்களை தாண்டும் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படும்.

இதற்காக ஆரம்பகட்டமாக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஒப்புதலின் பின்னர் மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த நிதியுதவி நேரடியாகப் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறு பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget