இதற்குரிய ஒப்பந்தம் நேற்று பத்தரமுல்லை, கொஸ்வத்தவில் உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் கையெழுத்தானது.
இந்தத் தொகுதி பஸ்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபையின் துணை நிறுவனமான ”லங்கா மெட்ரோ டிரான்சிட்”நிறுவனத்திற்காக இந்தக் கொள்வனவு செய்யப்படுகின்றன.
ஒப்பந்தத்தில், அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில சி. கே. பெரேராவும், பேருந்துகளை வழங்கும் இந்திரா டிரேடர்ஸ் நிறுவனம் சார்பாக அதன் இயக்குநர்கள் குழுவும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின்படி, இந்த 104 நவீன பஸ்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. தற்சமயம் மேல் மாகாணத்தை மையப்படுத்தி கடவத்தை மற்றும் ரத்மலானை போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மெட்ரோ சேவை முற்றத்துடன் ஓகஸ்ட் மாதம் இந்தப் பஸ்களையும் சேவையில் இணைப்பதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஒரு தரமான திருப்புமுனையை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
Post a Comment