Ads (728x90)

டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் பாதாள கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 21 பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பியோடி மறைந்திருந்த போது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
பின்னர் இந்த 21 பேரும் இன்று காலை இரண்டு விமானங்கள் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்களாவர், ஏனைய 19 பேரும் ஆண்களாவர். 

இவர்கள் நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்து, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த உள்ளிட்ட பிரபல பாதாள குழு பிரபலங்களும் உள்ளடங்குகின்றனர். 

இவர்களில் "மஹவத்தே சாமர" மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடமும், "குடு துமிந்த" மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget