Ads (728x90)

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

இச்சந்திப்பில், பொதுநலவாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்பிற்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, பொதுநலவாய அமைப்பின் வகிபாகத்தையும் வினைத்திறனையும் மேலும் பலப்படுத்துவதில் செயலாளர் நாயகம் வழங்கி வரும் தலைமைத்துவத்தைப் பாராட்டினார். 

அத்துடன், காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் ஆதரவு ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. 

தொழில்நுட்ப உதவி, மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள், காலநிலை நிதியுதவி மற்றும் தேர்தல் முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு இலங்கைத் தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகச் செயலாளர் நாயகம் இதன்போது உறுதியளித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget