இதற்கமைவாக மின்னணு தளங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கு ஜூலை 1 முதல் வற் வரி அறவிடப்படவுள்ளதுடன், டிஜிட்டல் சேவைகளுக்கான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவு தொடர்பான புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்த செய்திகள் தொடர்பில் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கம் அளித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வரிக் கொள்கையை எளிமைப்படுத்தும் நோக்கில், இதுவரை காலமும் அறவிடப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, இதுவரை காலமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட்ட 18% பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியன எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடன் (VAT) இணைக்கப்பட்டு 20.5% சதவீதமாக அறவிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முதன்மைச் சட்டத்தின் 10ஆவது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வரிக்குரிய காலப்பகுதியின் முடிவில் இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்ட வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த விநியோகப் பெறுமதி 9 மில்லியன் ரூபாயைத் தாண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் வரிப் பதிவை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment