ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
அவர் பணியில் இருந்தபோது ஒரு முறையும், பணி இடைநிறுத்தப்பட்ட பின்னர் இரண்டு முறையும் வாக்குமூலங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment