Ads (728x90)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குத் தேவையான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தமக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு தொடர்பாக ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் நேற்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதவி உயர்வானது 2026 ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான நிலுவை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை பொலிஸ் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டின் சமீபத்திய வரலாற்றில் இடம்பெற்ற பல சிக்கலான குற்றப் புலனாய்வுகளை வழிநடத்திய திறமையான அதிகாரியாக அறியப்படுகிறார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஷாணி அபேசேகர, சுமார் 11 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

2024 ஆம் ஆண்டு 3/2018 சுற்றுநிருப விதிகளின்படி மீண்டும் சேவையில் இணைந்துகொண்ட ஷாணி அபேசேகர, அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget