Ads (728x90)

உஸ்பெகிஸ்தான் தலைநகர் டஷ்கென்ட் நகரில் நடைபெற்ற அங்குரார்ப்பண மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் றக்பி (CASA 7s) தொடரில், இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாமல் சம்பியன் பட்டங்களை வென்று வரலாறு படைத்தன.

உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட றக்பி தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று தமதாக்கியுள்ளது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், அண்டை நாடான இந்திய அணியை 31-10 என்ற புள்ளிகள் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தி இலங்கை வீரர்கள் அபார வெற்றி பெற்றனர். 

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கஸகஸ்தானை 27 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர்அணி இலகுவாக வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget