Ads (728x90)

நிகவெரட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கணேவெவ புராதன விகாரையின் 2026ஆம் ஆண்டு “வைசாக்ய”நிகழ்வில் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் எதிர்கால சந்ததியினரை அதிலிருந்து மீட்டு, அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் சவாலை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்றுள்ளதாகவும், அதற்கு அவசியமான சட்டம், அதிகாரம் மற்றும் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

குறிப்பாக, மத எழுச்சியின் மூலம் இளைய தலைமுறையினரின் ஆன்மிக வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

தற்போதைய சமூகம் பெறுமதியானவை எனக் கருதுபவை, உண்மையான பெறுமதிகள் அல்ல என்பதையும், நாட்டிற்கு புதிய விழுமியக் கட்டமைப்பையும், பெறுமதிகள் கட்டமைப்பையும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டியதுடன், அனைத்து கலாசாரங்களையும் தனித்துவங்களையும் மதிக்கின்ற, ஒத்துணர்வு கொண்ட சமூகத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

எதிர்கால சமூகத்தை உருவாக்குபவர்களான தற்போதைய இளைய தலைமுறையினரை நல்ல தலைமுறையாகக் கட்டியெழுப்புவதில், இளம் பௌத்த தேரராக வண. கத்னோருவே சிறிதம்ம தேரர் ஆற்றிவரும் புத்தசாசன மற்றும் சமூகப் பணிகளையும் பாராட்டினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget