ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீன்பிடி சமூகங்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் வளர்ப்புக் கூடுகளை நிறுவுதல், தடுப்பு வலை அமைப்புகளை வழங்குதல், இங்கிநியாகல மீன் இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துதல், மீன்பிடி சங்கங்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை வழங்குதல் மற்றும் முதல் பயிர்ச்செயற் சுழற்சிக்கான மீன் குஞ்சுகள் மற்றும் தீவனங்களை இலவசமாக விநியோகித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய முன்னெடுப்புகளாகும்.
இலங்கையின் நன்னீர் மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்குவதிலும், மீன்பிடி வளர்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்பதிலும் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 கூண்டு மீன் வளர்ப்பு அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. மேலும் தடுப்பு வலை முறைமைகள், மீன் குஞ்சுகள், மீன் உணவு மற்றும் தேவையான தொழிநுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment