பேருந்துக் கட்டண திருத்தங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள தேசியக் கட்டணச் சூத்திரத்திற்கு அமையவே, கட்டணங்கள் திருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருந்தால் மாத்திரமே பேருந்துக் கட்டணத்தை திருத்த முடியும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பேருந்துகள் சேவையில் இருந்து விலகுவதாக கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment