குறித்த மனு மீதான தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுள திலகரத்ன, இந்த விவகாரத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
முறையற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையிலிருந்து தம்மைக் விடுவிக்குமாறு கோரி அவர் கொழும் மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையிலேயே அந்த மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment