செம்மணி மனித புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளை நேற்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையில் உள்ள குற்றவியல் சட்டமே இதற்குப் போதுமானது. சந்தேகநபர்களைக் கைது செய்து, சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு உள்நாட்டுச் சட்டங்கள் போதுமானதாகவே உள்ளன.
ஆனால், இந்த விசாரணைகள் இன்னும் அந்தளவிற்கு முன்னோக்கி நகர்த்தப்படவில்லை. தற்சமயம் அகழ்வு மட்டத்திலேயே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனை வழங்குவதற்கு நாட்டில் உள்ள சட்டத்தின்படி நாம் செயற்படுவோம் என்றார்.

Post a Comment