உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளில், சுமார் 100,000 மக்களிடம் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 54% பேர் செய்திகள் மற்றும் அன்றாடத் தகவல்களுக்காக சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாற்றம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகத் தீவிரமாக உள்ளது.
அவர்கள் பாரம்பரிய செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சி அல்லது நாளிதழ்களைப் பார்ப்பதைத் தவிர்த்து காணொளிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஒன்லைன் ஆளுமைகள் மூலமாகவே செய்திகளை தேடுகின்றனர்.
நடப்பு நிகழ்வுகள் குறித்து பொதுமக்களின் புரிதலை உருவாக்குவதில், தனிநபர் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Creators) மற்றும் சுயாதீன பதிப்பகங்களின் (Independent Publishers) பங்கு முன்னெப்போதையும் விட வேகமாக அதிகரித்து வருகிறது.
செய்திகள் தேடுவதில் ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றம், ஊடகத்துறையில் சில முக்கிய கவலைகளையும் தோற்றுவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் செய்திகளில் உள்ள உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில் உள்ள சவால்கள் மற்றும் போலியான செய்திகள் பரவுவது போன்ற அச்சுறுத்தல்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
.jpeg)
Post a Comment