Ads (728x90)

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக் கொள்கை கருத்துப் பத்திரம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வறிவுறுத்தலை வழங்கினார்.

முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி (ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை), உயர்கல்வி, தொழிற்துறைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி ஆகிய அடிப்படைகளின் கீழ், தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களானது முன்னெடுக்கப்படுவதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

இதுவரை நாட்டில் நிலவிய கல்வி முறைமை, அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றின் மூலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

அந்த கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மீளாய்வு செய்து, அதிலிருந்து வெளிப்படும் முக்கிய விடயங்கள் தொடர்பில் புதிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget