22 ஆண்டுகளாக வாகன இலக்க தகடுகள் அச்சிடும் தனியார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சகம் வாகன இலக்க தகடுகள் அச்சிட உகந்த புதிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முறையான செயல்முறையை முன்னெடுத்திருந்தது.
அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனமும், வாகன போக்குவரத்துத் துறையும் இந்த வாகன இலக்க தகடுகள் அச்சிடும் பணியை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், உரிய கொள்முதல் நடைமுறைகளின்படி நாங்கள் கொள்முதல் பணிகளை ஆரம்பித்தோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், தரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய, அந்த நிறுவனத்தின் ஊடாக அச்சிடும் பணிகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment