Ads (728x90)

அரசாங்க அதிகாரிகள் 2026 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படியான தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் கட்டாயமாக அபராதத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ், வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரிவினர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் சொத்து விபரங்களை சமர்ப்பித்தவர்களும், புதிய சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட புதிய வகை அதிகாரிகளும் இந்த ஆண்டு முதல் மத்திய இலத்திரனியல் முறைமையின் ஊடாக மாத்திரமே தமது விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்எஸ்டி ஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து விபரங்களும் https://aldciabocgovlk/ என்ற இணையத்தள முகவரியின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ் பின்வரும் தரப்பினர் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்:

பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள்

பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்

தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்

தேசிய விளையாட்டுச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள்

சுங்கத் திணைக்கள அதிகாரிகள்

இலங்கையிலிருந்து ஊழலை ஒழிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0767011954 அல்லது 0112587287 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget