Ads (728x90)

மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற பிபா 2026 உலகக் கிண்ணத் தொடரின் A பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் செக் குடியரசை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், இரு அணிகளாலும் முதல் பாதியில் எவராலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0:0 என கோல் ஏதுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தது. ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் லடிஸ்லாவ் ஒரு அபாரமான கோலை அடித்துத் தனது அணியை 1:0 என முன்னிலைப்படுத்தினார்.

இந்நிலையில் தென் கொரியாவின் ஹ்வாங் இன்-பியோம் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில், செக் குடியரசு அணியின் டோமஸ் சௌசெக், வலைக்குள் செலுத்தினார். ஆனால், நடுவர் அந்த கோலை நிராகரித்தார்.

இந்த நிலையில், 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹியோன்-க்யு கோல் அடித்து கொரியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்படி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2:0 என வீழ்த்திய மெக்சிகோ அணியுடன் தற்போது தென் கொரியாவும் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget