Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களைப் பயன்படுத்தி, "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி காணொளிகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.

இணையவழியில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகளுக்காகவே, இந்த போலி காணொளிகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் இந்த போலி காணொளிகளில், அதிக லாபம் தருவதாகக் கூறி மக்களைப் பணத்தை முதலீடு செய்யத் தூண்டும் இணையத்தள இணைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந்த இணைப்புகளை அழுத்தும்போது, அவை தனிப்பட்ட தரவுகளையும், பணத்தையும் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி வலைத்தளங்களுக்கு மக்களை இட்டுச் செல்லக்கூடும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.

குறித்த காணொளிகளில் பணத்தை முதலீடு செய்து அதிக இலாபம் ஈட்டுமாறு மக்களை ஊக்குவிப்பது போன்று போலியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இத்தகைய ஏமாற்று வேலைகளுக்காகப் பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏனைய முக்கிய ஆளுமைகளின் புகைப்படங்களும், அடையாளங்களும் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget