இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் நேற்று முன்தினம் பத்தரமுல்லை, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷென்ஹொங் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது.
இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.

Post a Comment