Ads (728x90)

தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கான தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

சீன அபிவிருத்தி வங்கி வழங்கிய சலுகைக் கடனில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2022 மே மாதம் முதல் 2024 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தேசிய முக்கியத்துவம் கருதி இலங்கை அரசாங்கத்தின் நிதியையும் பயன்படுத்தி தற்போதைய அரசாங்கத்தின் கீழ், இத்திட்டத்தின் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதியில் வேகமாக பரவி வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு ஒரு தீர்வாக இந்த நீர் வழங்கல் திட்டம் அமைகின்றது. இதன் மூலம் 25,000 வீடுகளுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

32 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டம், நாளொன்றுக்கு 18,000 கன மீற்றர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், தலா 1,500 கன மீட்டர் திறன் கொண்ட 03 நீர் தாங்கிகள், 12.75 கிலோமீற்றர் நீளமுள்ள நீரைக் கொண்டு செல்லும் குழாய்க் கட்டமைப்பு மற்றும் 158 கிலோ மீற்றர் நீளமுள்ள நீர் விநியோகக் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget