களுத்துறை தெற்கு, ரெமுணகொட, கோன்கொட ஸ்ரீ கங்காராம புராண மகா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட உலோக சமாதி புத்தர் சிலையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வேகமான மற்றும் சிக்கலான சமூகச் சூழலில் மக்களின் மனங்களுக்கு அமைதியும், ஆன்மீகச் சாந்தியும் மிகவும் அவசியமானது எனச் சுட்டிக்காட்டி பிரதமர், பிரதேச மக்களிடம் இருந்த உலோகங்களைப் பயன்படுத்தி இந்தச் சிலையை உருவாக்கியமையும் பாராட்டிப் போற்றப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என அவர் கூறினார்.
கோன்கொட ஸ்ரீ கங்காராம புராண மகா விகாரை வளாகத்தில் இவ்வாறான கலைநயமிக்க சமாதி புத்தர் சிலையைத் திறந்து வைப்பது, முழுப் பிரதேசத்தின் பௌத்த மக்களின் ஆன்மீகச் சுகவாழ்விற்காக ஆற்றப்படும் மகத்தான சேவையாகும் என்றும் தெரிவித்தார்.நாட்டின் மத மற்றும் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதும், விகாரைகளை அபிவிருத்தி செய்வதும் அரசாங்கத்திற்குப் பாரிய பொறுப்பாக சாட்டப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன அமைச்சு மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஊடாக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment