கரும்புச்சாறில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலின் சோர்வை நீக்கி ஆற்றலை கொடுக்கிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்தவும், கல்லீரலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் கரும்புச்சாறு உதவுகிறது.
கரும்புச்சாறு செரிமான சுரப்பை மேம்படுத்துவதோடு, செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. கரும்பு சாறில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக செயல்பாட்டை உறுதி செய்து சிறுநீர் பாதை தொற்றில் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
கரும்பு சாறில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

Post a Comment