Ads (728x90)

உலக வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டிற்கு அமைய, இலங்கை மீண்டும் ஒருமுறை உயர் மத்திய வருமானம் பெறும் நாடாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 

இருப்பினும், அந்த நெருக்கடியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளதாக உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகள் மீண்டும் புத்துயிர் பெற்றமை, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தாக்கம் செலுத்திய முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையின் இந்த பொருளாதார மீட்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அங்கீகரித்துள்ளது.

நாட்டில் முதலீடுகளை அதிகரித்தல், போட்டித்திறனை மேம்படுத்துதல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget