Ads (728x90)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று நண்பகல் வெடித்த கைதிகளுக்கு இடையிலான மோதல், இன்று காலை மீண்டும் இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது. 

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உட்பட, சிறைக்கைதிகள் 19 பேருமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 18 பேர் கம்பஹா, வெலிசர ராகம மருத்துவமனைகளுக்கும், 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையின் தீவிரத்தன்மை காரணமாக 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றைச் சிறைவாசி ஒருவர் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் நிலையே, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில் இத்தகைய பெரும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. 

மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இந்த மோதல் ஏற்பட்ட சிறைச்சாலையில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த மோதலை சிறையில் தண்டனை அனுபவித்துவரும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவரே வழிநடத்தியதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget