Ads (728x90)

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்பை பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி வழங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget