Ads (728x90)

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.

கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget