இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2027 ஜனவரி 4 திங்கட்கிழமை முதல் 2027 ஏப்ரல் 09 வெள்ளிக்கிழமை வரையும், இரண்டாம் தவணை 2027 ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல் 2027 ஜூலை 30 வரையும், மூன்றாம் தவணை 2027 ஒகஸ்ட் 30 திங்கட்கிழமை முதல் 2027 டிசம்பர் 03 வெள்ளிக்கிழமை வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.
முதலாம் தவணை:
கட்டம் 1: ஜனவரி 04 – பெப்ரவரி 05
கட்டம் 2: மார்ச் 15 – ஏப்ரல் 09
கட்டம் 3: ஏப்ரல் 15 – ஏப்ரல் 30
இரண்டாம் தவணை:
கட்டம் 1: மே 03 – மே 14
கட்டம் 2: மே 21 – ஓகஸ்ட் 27
மூன்றாம் தவணை:
ஓகஸ்ட் 30 – டிசம்பர் 03
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஒகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளன. புதிய தரம் 12 வகுப்புகள்: 2027 ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.
விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பாடசாலை நாள் மூடப்பட நேரிட்டால், அதற்குப் பதிலாக மாற்று வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.jpeg)
Post a Comment