Ads (728x90)

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 579 சுற்றுலாப் பயணிகள் உட்பட 823 இற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 பேர் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 100 இற்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர். 

நேபாள பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள தகவல்களின் படி, 44 இராணுவத்தினரும், 28 பொலிஸாரும், 13 ஆயுதமேந்திய பொலிஸாரும், மின்சாரத் திட்டங்களில் பணிபுரியும் 60 பேரும் காணாமல் போனவர்களில் உள்ளடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. 

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30 இற்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget