ஜோதிட சாஸ்திரப்படி, ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கிறார். கடகம் என்பது நீர் ராசியாகவும், சந்திரனின் வீடாகவும் உள்ளது. இந்நாளில் பித்ருகாரகனான சூரியனும், மாத்ருகாரகனான சந்திரனும் ஒன்றாக இணைகின்றனர். இதனால் முன்னோர்களின் ஆசி பூமிக்கு முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பித்ருக்கள் வசிக்கும் பித்ரு லோகத்திலிருந்து, அவர்கள் பூலோகத்திற்குத் புறப்படும் காலம் "தட்சிணாயனம்" (ஆடி முதல் மார்கழி வரை). தட்சிணாயனத்தின் தொடக்கத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், இந்நாளில் அவர்களை வரவேற்று எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும்.
குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படும் தடை, தாமதம், நோய்கள் அல்லது குழப்பங்களுக்கு பித்ரு தோஷம் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசையன்று நதிக்கரை, கடற்கரை அல்லது புனித நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் தெளித்துத் தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதியும், வளமும் பெருகும்.
ஆடி அமாவாசையன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அல்லது தான தர்மங்கள் செய்வது கூடுதல் நன்மைகளைத் தரும்.
பிதிர் கடன் செய்வதால், ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் நீண்டநாட்களாகத் தொடரும் தடைகள் (திருமணத் தடை, சந்ததியின்மை, தொழிலில் நஷ்டம்) அகலும்.
பிதிர் கடன் செய்யும் போது நமது தந்தை, பாட்டன், முப்பாட்டன் ஆகிய மூன்று தலைமுறை பித்ருக்களும் நேரடியாக ஆசீர்வதிக்கின்றனர்.
நம்மைக் காத்த முன்னோர்களுக்கு நன்றிக்கடனாகச் செய்யும் இந்த வழிபாடு, அவர்களின் ஆசியைப் பெற்றுத் தருவதோடு, சந்ததியினரின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
1.jpeg)
Post a Comment