கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' வகை போதைப்பொருளின் அளவு 463 கிலோகிராம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தள்ளார்.
குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகமும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment