போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே சிறைச்சாலை மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன. பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளோம். சிறைச்சாலை கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
சிறைச்சாலை நெரிசல் தன்மை தீவிரமடையும் போது கைதிகள் மத்தியில் உளவியல் ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சிறைச்சாலை நெரிசல் தன்மையை முகாமைத்துவம் செய்வதற்கு மானிட மற்றும் பௌதீக மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் பிரகாரம் இதற்கு தீர்வு காண்பதற்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கைதிகளின் மனித உரிமைகளை பாதுகாப்பது கடினமாகும். அதனால் தான் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆராயப்படுகிறது.
போதைப்பொருளுக்கான கேள்வியை குறைத்தால் மாத்திரமே போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க முடியும். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் இல்லாத காரணத்தால் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது. தற்போதைய பதில் ஆணையாளர் நாயகத்துக்கு சட்டத்தால் சகல அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.
.jpeg)
Post a Comment