அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான 'ஜனநாயகன்', இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 23ந் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கடந்த பொங்கலுக்கே வெளியாகவேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் தடைப்பட்டு இறுதியில் வெளிவந்துள்ளது. விஜய் நடித்த இறுதி படம் என்பதால் அவரது ரசிகர்கள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இதில், ட்ரோல் சினிமா என்ற பக்கத்தில், ஜனநாயகன் முதல் பாதி தரம். தொடக்கம் முதல் இறுதிவரை முழுக்க முழுக்க கூஸ்பம்ப்ஸ் தரும் காட்சிகள் அதிகம்.
முதல் 20 நிமிடங்கள் முழுவதும் விஜய்யின் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. டைட்டில் கார்டு முதல் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும் தியேட்டரையே ஆட்டம் போட வைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இயக்குனர் வினோத் இப்படத்தினை அருமையான திரைக்கதையால் வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
.jpeg)
Post a Comment