நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் தலையீட்டுடன் நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில், அதிக நெல் அறுவடை பதிவாகும் பகுதிகளில் அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான கொள்வனவுத் திட்டத்தின் கீழ் தோராயமாக 39,500 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. எனினும், அரசாங்கம் தற்போது அந்த இலக்கைக் கடந்துள்ளது.
.jpeg)
Post a Comment