Ads (728x90)

இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளில் இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களின் நிதிச் சார்ந்தத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறை இன்று ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அலட்சியமாக இருப்பதன் மூலம் கணக்கிலுள்ள பணத்தை மோசடிக்காரர்கள் திருடக்கூடும் என எச்சரித்துள்ள காவல்துறை பின்வரும் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளது.

வங்கி கடவுச்சொற்கள் (Passwords) அல்லது ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTPs) குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உட்பட யாருடனும் பகிர வேண்டாம்.

கைபேசிகளுக்கு வரும் OTP எண்களைப் பகிர வேண்டாம். ஏனெனில் அவை கணக்குகளைத் திறப்பதற்கான முதன்மைச் சாவியாகச் செயல்படுகின்றன.

வர்த்தக நிலையங்கள் அல்லது உணவகங்களில் அட்டைகளைப் பயன்படுத்தும்போது, பரிவர்த்தனைகள் உங்கள் முன்னிலையிலேயே செய்யப்படுவதை உறுதிசெய்யவும். அட்டைகளை எவரும் வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர்கள்.

அட்டைகளின் பின்புறம் உள்ள மூன்று இலக்க CVV எண்ணை எவருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.

கணக்குகளிலிருந்து பணம் பெறப்படும்போதோ அல்லது எடுக்கப்படும்போதோ உடனடியாகத் தெரிந்துகொள்ள குறுஞ்செய்தி (SMS) அறிவிப்பு வசதியைச் செயல்படுத்திக் கொள்ளவும்.

பணத்தின் பாதுகாப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் கரங்களிலேயே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget