Ads (728x90)

இலங்கைக்கு அண்மித்து காணப்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலையானது, தற்போது குறைந்த தாழழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக, நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல், தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையை ஒட்டிய வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வடக்கு மாகாணம், தென் மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டம் ஆகியவற்றின் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மேற்கு முதல் தென்மேற்கு திசைகளிலிருந்து காற்று வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் எதிர்பார்க்கப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget