Ads (728x90)

கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 1,540 கிராம அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, வசதிகளை வழங்குவதாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் அரச சேவையைப் பெரிதும் மதிக்கின்ற அதேவேளை, அரச சேவையைச் சிறந்த சம்பள மட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு அரசாங்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனாலேயே மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட அடிப்படைச் சம்பளத்தையும், கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது என்றும் தெரிவித்தார்.

இங்கு, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு ஜனாதிபதியால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 

இன்று நீங்கள் இலங்கையின் மிக முக்கியமான ஒரு தொழில் துறைக்குள் காலடி எடுத்து வைக்கிறீர்கள். நம் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் அரச அதிகாரி யார் என்று கேட்டால், அது நமது கிராம உத்தியோகத்தர் தான் இருப்பார்கள். 

ஒரு கிராமத்தில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் அரசிற்கும் இடையிலான தொடர்பும், அரசினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் கிராம உத்தியோகத்தர்களை அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. 

கிராமத்தைப் பொறுப்பேற்றுப் பணியாற்றும் ஒரு அதிகாரி என்ற வகையில் மாத்திரம் நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல. நாங்கள் தயாரித்துள்ள பொருளாதார மற்றும் சமூக நோக்கின் காரணமாகவே நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் என்று மேலும் தெரிவித்தார். 

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவை தரம் III இற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கு முதன்முறையாக இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன. 

பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் திறமைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தகுதியானவர்களை அரச சேவைக்கு உள்ளீர்க்கும் கொள்கைக்கு இணங்க, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget