இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகியுள்ளதை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக முறையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிகளை வகுத்தல் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், அடுத்த வரவு செலவுத் திட்டத்திலும் இவற்றுக்காக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்தஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு 30 பில்லியன் ரூபா வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்க வேண்டும்.ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்களது வருமான நோக்கத்தை மட்டுமே கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
தனியார் களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பினும் அதனை விநியோகிக்காமல் உள்ளனர். இது தவறான செயலாகும். இதுபோன்ற செயற்பாட்டையே ஏனைய தனியார் எரிவாயு நிறுவனங்களும் செய்கின்றன.
அரச நிறுவனத்தினால் வழங்க முடிகின்ற போது, ஏன் தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு வழங்க முடியவில்லை? போட்டித்தன்மையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காகவே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், தற்போதைய செயற்பாடுகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பின் பயன் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, நாடளாவிய ரீதியில் 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மட்டுமே கொண்ட நகரங்களும் நாட்டில் உள்ளன. அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க முடியாது எனத் தெரிவித்தால், அங்குள்ளவர்களின் நிலைமை என்னவாகும்?
இந்தநிலைமையின் பாரதூரமான தன்மையை அறிந்தே நாம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை வந்தது.
எனவே, இவ்வாறான காரணிகளின் அடிப்படையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




Post a Comment