முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் முன்னிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சுஜிபா சிவதாஸ் அவர்களிடம், முல்லைத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அவர்களால் காணி விடுவிப்பு ஆவணம் கையளிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிலிருந்த நிலங்களை படிப்படியாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கும், பொதுப் பயன்பாட்டிற்காக அவற்றை கிடைக்கச் செய்வதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள கொள்கையின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் 59-வது படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன் இந்நிகழ்வில் போது தனது நன்றியை தெரிவித்தார்.
Post a Comment