Ads (728x90)

விடுதலைப் புலிகளைப் போன்று மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை. இது தொடர்பாக முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜேரத்ன உண்மைக்கு புறம்பான கூற்றுகளைக் கூறி வருவதாக மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். 

ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் மல்வத்தை பீடத்தின் பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது  பீடாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

கலந்துரையாடலின் போது, மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) கதிர்காம திருவிழா மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை மீது குண்டு வீசியதாகக் கூறப்படுவதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டு வீசியதாகக் கூற இயலாது.

ஸ்ரீ தலதா மாளிகையைப் பாதுகாத்து வந்த பொலிஸாருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக் வழங்கப்பட்டது. இதன்போது   துப்பாக்கிகளை அவர்கள் பறித்துக்கொண்டார்கள். முன்னணியில் இருந்த பொலிஸாரின் துப்பாக்கிகளே பறிக்கப்பட்டன. எனினும் விடுதலைப்  புலிகளைப் போன்று குண்டுகளை வீசி மக்கள் விடுதலை முன்னணி தாக்குதல் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிகள் திருடப்பட்ட ஒரு சம்பவத்தையே பீடாதிபதி இச்சந்திப்பில் நினைவு கூர்ந்தார். கூற்றுகளை முன்வைப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இல்லாதபோது சிலர் பொய்யான கூற்றுகளை முன்வைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget