ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கண்டியிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி விஹாரமகாதேவி பூங்காவில் இந்தச் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டம் நேற்று பத்தாவது நாளை எட்டியிருந்தது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்திருந்த தேரர்கள், மகாநாயக்க தேரர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய எழுத்துமூல அறிவித்தலை தொடர்ந்து, அவர்களின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளித்து சத்தியாக்கிரகத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment