Ads (728x90)

கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை ஒன்று இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, வாரியப்பொல சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலிருந்து ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் வரை சென்றடையவுள்ளது.

கஸ்ஸப்ப தேரர், உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட முக்கிய பௌத்த பிக்குகள் பலரும், பல்வேறு பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டுள்ளனர்.

ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் எந்த வகையிலும் கைவிடப்பட மாட்டாது எனவும், நிலவும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் வன்முறையற்ற முறையில் பாதயாத்திரையில் இணையுமாறும் உலப்பனே சுமங்கல தேரர் அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர், அவர் அங்கம் வகிக்கும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையுடன் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் பிரதம பதவி வகிக்கும் கொட்டப்பிட்டியே ராகுல தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget