Ads (728x90)

தேன் உணவு பொருள்கள் எளிதில் செரிமானமாவதை ஊக்குவிக்கும். அதோடு உணவிலிருக்கும் சத்துகளைப் பிரித்து உணவுபொருளை கரைப்பதிலும் பங்குவகிக்கிறது. உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. வயிறு உப்புசம், மந்தம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

மேலும், உடலில் இருக்கும் தேவையற்ற சதைப்பகுதியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க உதவுகிறது. உடலில் இருக்கும் கலோரிகளும், கொழுப்புகளும் எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதும் சாத்தியமாகிறது.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும். கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி சாறு சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்கவும்.  

காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.

சுத்தமான தேனில் பூண்டின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கவும். பூண்டை பாட்டிலில் அடைத்து அது மூழ்கும் வரை தேனை விட்டு ஊறவிடவும். 

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டை நசுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். மிகக் குறைந்த நாட்களில் உங்கள் உடல் எடை குறைந்து வருவதை நீங்கள் உணரலாம்.


Post a Comment

Recent News

Recent Posts Widget